பிரதமர் மோடியுடன் சந்திப்பு – டெல்லி சென்றடைந்தார் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி சென்றார்.

அவரை டெல்லி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் வரவேற்றனர்.

காந்தியடிகளின் 150வது பிறந்த விழாவிற்கு பிறகு பிரதமரை சந்தித்து தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நாளையே முதல்வர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே