சூளைமேட்டில் வசித்து வந்த திருமணமான பெண் போண்டா சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கியதால் மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு காமராஜ் நகரில் வசித்து வருபவர் கங்காதரன். இவர் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் பத்மாவதி.

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்மாவதி தனது தாயுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று பத்மாவதியும், அவரது தாயும் வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது போண்டா வாங்கி வந்துள்ளனர்.

பத்மாவதி, கடையில் போண்டா வாங்கி வந்து தமது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பதறி போன அவரது தாய், பத்மாவதியின் வாய்க்குள் தண்ணீரை ஊற்றி குடிக்க செய்தார்.

ஆனால் தண்ணீரும் தொண்டைக்குள் இறங்காமல் இருந்துள்ளது.

இதையடுத்து பக்கத்துக்கு வீட்டினரின் உதவியுடன் அவசர ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளனர்.

பின்னர் பத்மாவதியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அங்கு சோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூளைமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த ஆண்டு புதுச்சேரியை சேந்த புருஷோத்தம்மன் என்பவர் சாப்பிட்ட பரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே