உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த பிரான்ஸ் பெண்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நபரை ஆதரித்த பிரான்ஸ் இளம்பெண் வாக்கு சேகரித்தது கவனத்தைப் பெற்றுள்ளது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலராங்கியம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மருது பாண்டி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் மருதுபாண்டிக்கு ஆதரவாக அவரது மருமகனின் தோழியான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணும் வந்துள்ளார்.

அப்போது மருது பாண்டியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிட, பிரான்ஸ் இளம்பெண்ணும் தனது பங்குக்கு மாமாவுக்கு ஓட்டு போடுங்க என மருதுபாண்டிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த Zoe, இந்தியா வந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

பள்ளிப் படிப்பு முடிந்து அடுத்து கல்லுரி செல்ல இன்னும் ஒரு வருடம் இருப்பதால் உலகை சுற்ற வந்துள்ள நிலையில் தமிழகத்தில் வலம் வந்து கொண்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் நேற்று பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் வேளையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணும் ஊர்வலமாக வந்தது வேட்பு மனுதாக்கலை கலகலப்பூட்டியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே