இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா? என்ன செய்யப்போகிறார் கோலி? இன்று 2ஆவது டி20!

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 27 பந்துகள் எஞ்சிய நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி படைத்திருந்தது. இந்நிலையில் இந்த தொடரின்  இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவ டாப் ஆரடர்கள் பேட்ஸ்மேன்களான தவான், ராகுல் மற்றும் கோலி ஒற்றை இலக்கத்தில் அவுட்டானது காரணமாக பாரக்கபடுகிறது. இதில் கோலி ரன் எதுவும் சேர்க்கமால் டக் அவுட்டாகி இருந்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதில் பிஸியாக இருந்தனர். ஜேசன் ராய், பட்லர், டேவிட் மாலன், பேர்ஸ்டோ என நான்கு பேரும் 20 ரன்களுக்கு மேல் குவித்திருந்தனர். அந்த போட்டியில் அவர்களது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 116 க்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேட்டிங் இன்னிங்ஸில் முதல் ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களை குவித்திருந்தது. “சரியான ஷாட்களை நாங்கள் விளையாடாதது தான் இதற்கு காரணம். ஆட்டத்தின் நாளன்று களத்தில் பேட்ஸ்மேன்கள் செய்த தவறே தோல்விக்கு காரணம்” என கேப்டன் கோலி ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார்.

“விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை வெல்ல விரும்பினால் சிறந்த ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் நிச்சயம் இங்கிலாந்து மீது பிரஷர் போடுவது இயலாத காரியம். ரோகித் ஷர்மா அணியில் இல்லாததும். தவான் மற்றும் கே. எல். ராகுல் அனுபவமும் அணிக்கு தேவை என்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும் சரியான கலவையில் வீரர்களை கொண்டு வர வேண்டும்” என முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மணன் தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில் ரோகித் ஷர்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டதும் கேள்வியாக எழுந்துள்ளது. இருப்பினும் இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் வென்று தொடரை சீல் செய்யும் முனைப்போடு களம் இறங்கும். அதன் மூலம் அது இந்தியாவுக்கு நெருக்கடியாக அமையும் என சொல்லபடுகிறது.

அதனால் கடந்த போட்டியில் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெற்ற வீரர்கள் இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் மாதிரியான பவுலர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். அவர்களை இந்தியா பேட்ஸ்மேன்கள் சமாளித்தாக வேண்டும்.

அதே போல இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டாவது பேட்டிங் செய்கின்ற அணிகள் தான் அதிகம் வெல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தியா இந்த போட்டியில் டாஸ் வென்றால் பவுலிங்கை தான் தேர்வு செய்தாக வேண்டும்.

சர்வதேச டி20 களத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து 8 போட்டிகளிலும், இந்தியா 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற முயற்சிகளை முன்னெடுக்கும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டமாகவே இந்த தொடரை அணுகும் என தெரிகிறது.    

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே