கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிக்கு கடந்த ஒரு வாரத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் நிலமும் 700க்கும் மேற்பட்ட வீடுகளும் சாம்லாகியுள்ளனன.
இதையடுத்து சான்பிரான்சிஸ்கோ குடாப்பகுதியில் சிகப்புக் கொடு எச்சரிக்கையான அதி தீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை அமெரிக்க தேசீய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது.
அதிபர் டிரம்ப், பேரிடர் தீர்மானம் ஒன்றை வெளியிட்டு அரசு உதவி அளிக்க முடிவெடுத்துள்ளார்.
இதன் மூலம் வீடிழந்தோருக்கு வீடு, மன அழுத்தங்களுக்கு ஆளோனோருக்கு கவன்சிலிங் உள்ளிட்ட சமூக சேவைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீ, சுமார் 10 லட்சம் ஏக்கர்களை அதாவது 1,562 சதுர மைல்கள் அல்லது 4,096 சதுர கி.மீ., நிலப்பரப்பை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.
இந்த காட்டுத்தீயில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
13,700 தீயணைப்பு வீரர்களும், தேசிய காவல்படை மற்றும் அமெரிக்க ராணுவமும் காட்டுத்தீயின் உக்கிரத்தைத் தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது எரிந்து வரும் காட்டுத்தீ, சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் பழைய காட்டுத்தீ சாதனைகளை முறியடித்து 2 மற்றும் 3வது பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் பதிவாகக் கூடும் என, வல்லுநகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.