திமுக போராட்டத்தில் விஜய் பங்கேற்க மாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக போராட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னை அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் கலந்து கொண்டு வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத இன வேறுபாடின்றி சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வரும் இந்த நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் தவறானது என விமர்சித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராடுவது தவறல்ல என குறிப்பிட்ட எஸ்.ஏ சந்திரசேகர், மாணவர்களும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் எனக் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெறும் திமுக போராட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் எனவும் இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே