கிரிக்கெட் ஆடியே சச்சினும் கோலியும் பணக்காரர்கள் ஆக முடியும் போது ஒரு கால்ஃப் வீரர் ஏன் ஆக முடியாது: கபில் தேவ்

நான் பிஜிடிஐ-யில் உறுப்பினராக இணைந்தது கால்ஃப் ஆட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காகத்தான், இதன் மூலம் இளைஞர்கள் எப்படி ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

புரொபஷனல் கால்ஃப் டூர் ஆஃப் இந்தியாவின் வாரிய உறுப்பினராக கபில் தேவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் இளம் கால்ஃப் வீரர்களை உருவாக்கி, கிரிக்கெட் வீரர்கள் போல் கால்ஃப் ஆட்டத்தையும் ஒரு வாழ்வாதாரமாக மாற்ற முடியும் என்கிறார் கபில்தேவ்.

இன்சைட் ஸ்போர்ட்சிற்காக கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் பிஜிடிஐ-யில் உறுப்பினராக இணைந்தது கால்ஃப் ஆட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காகத்தான், இதன் மூலம் இளைஞர்கள் எப்படி ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

விராட் கோலியும், சச்சின் டெண்டுல்கரும் கிரிக்கெட் மூலம் பணக்காரர்கள் ஆக முடியும் என்றால் ஒரு திறமையான கால்ஃப் வீரரால் ஏன் ஆக முடியாது? ஒருவிளையாட்டு வீரனாக இந்த ஆட்டத்தைப் பிரபலப்படுத்த முயற்சி செய்வேன்.

கால்ஃபுக்குள் பண முதலீட்டைக் கொண்டு வர முடிந்தால் இதனை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அரசு அதில் பெரிய அளவில் பங்களிக்கவில்லை.

எல்லா விளையாட்டுக்களும் இப்படி இருக்க வேண்டும். விளையாட்டுக்கு உதவுவோம், அதுதான் முக்கியம், என்றார் கபில்.

கபில்தேவினால்தான் இந்தியாவில் கிரிக்கெட் வெகுஜன மக்கள் வரையில் பரவலாக்கம் பெற்றது. ஐபிஎல்-க்கு முன்பாக ஐசிஎல் அவர்தான் ஆரம்பித்தார், அந்த வர்த்தக மாதிரியைத்தான் லலித் மோடி தன் கண்டுப்பிடிப்பாக கூறிக்கொண்டார். எனவே கபில் நினைத்தால் எந்த விளையாட்டையும் பண வரவு விளையாட்டாக மாற்ற முடியும்.

இப்போது கால்ஃபில் இறங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே