வரும் 22 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வரும் 22 முதல் 30 வரை தேர்வுகளை அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்நாட்களில் குரூப் 1 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.
தேர்தலையடுத்து ஜனவரி 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிவரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ் சி. தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.01.2020 வரை www.tnpsc.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ் சி. அறிவித்துள்ளது.