விவசாயிகள் போராட்டம்..; பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை..!!

விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித சுமூக முடிவுகளும் எட்டப் படவில்லை.

பார்லி.,யிலும் விவசாயிகள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

ராஜ்யசபாவில் இன்று (பிப்.,03) நடைபெற்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனையடுத்து மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் இடையே பேச்சுவார்த்தையில் 15 மணி நேரம் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க ஒப்பு கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே