தமிழகத்தில் மேலும் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,04,650 ) 8 லட்சத்து 04 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,04,650 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,82,915 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,170 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,954 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 5; தனியார் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 341 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,21,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,33,10,701 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இன்று மட்டும் 75,347 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 234 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 167.

* தமிழகத்தில் தற்போது 9,781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,86,202 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 658 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,18,414 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 476 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதில், விமானம் மூலம் வந்தவர்களில் 3 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* டெல்லி-3.
* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே