மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் ?

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கேள்விக்கு சிவசேனா மாநில தலைவர் சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடனான சிவ சேனாவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த சிவசேனாவின் மாநில தலைவர் சஞ்சய் ராவத், கடந்த 10- 15 நாட்கள் நீடித்து வந்த அத்தனை தடைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.

நாளை முடிவு குறித்து அனைவருக்கும் தெரியவரும்.

இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மஹாராஷ்டிராவின் விவசாயப் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர்.

பிரதமரிடம் விவசாயப் பிரச்னைகளின் தீவிரம் குறித்து எடுத்துரைக்க பவாரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் சிவசேனா உடன் கூட்டணி அமைக்க காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனாலும் மஹாராஷ்டிராவின் ஆட்சியை டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா கைப்பற்றிவிடும் என்றே சிவசேனா ஆதரவாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே