கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 15 நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் சர்வதேச அளவிலான அவசர நிலையை உலக சுகாதார அமைப்பான WHO பிரகடனப்படுத்தியுள்ளது. 

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த ஐநா.சபையின் சுகாதார அமைப்பான உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவிலான அவசர நிலையை அறிவிப்பதாக தெரிவித்தார்.

போதிய மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத பலவீனமான நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக கூறிய அவர் இந்த வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதே தங்கள் இலக்கு என விளக்கம் அளித்துள்ளார்.

இது சீனாவின் மீது நம்பிக்கையில்லாத நிலை அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த கொடிய வைரஸ் சீனா தவிர அமெரிக்கா உள்பட மேலும் 15 நாடுகளுக்குப் பரவி வருகிறது.

24 மணி நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் 38 பேர் உயிரிழந்தனர்.

மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 1700 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே