எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? கங்குலி தகவல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

ஜூன் மாதம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரின் புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்தள்ளது. இது குறித்து ‘இந்தியா டுடே’வுக்கு பேட்டியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கு

அதில் “அனைவரையும் போலவே நானும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண ஆவலாக இருக்கிறேன். இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. லண்டனில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுத்தாம்ப்டனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. இரு நாட்டு வீரர்களுக்கும் சவுத்தாம்ப்டன் நகர்தான் பாதுகாப்பானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார் சவுரவ் கங்குலி.

மேலும் பேசிய அவர் “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றது இந்தியா. இந்த வெற்றியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் தொடரும் என நம்புகிறேன். கோலி, ரஹானே மற்றும் பன்ட் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்” என்றார் சவுரவ் கங்குலி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே