ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ?? – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல் நலம் குறித்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 14 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

இதில் நடிகர் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததாகவும் படக்குழு கூறியது.

இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவியது.

அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை.

ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு முழு ஓய்வு தேவை.

எனவே, பார்வையாளர்கள் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் . ரஜினிகாந்தின் மகள் அவரை கவனித்துக்கொள்கிறார்.

ரஜினியின் ரத்தம் அழுத்தம் மற்றும் உடல்நிலை சீரான பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே