திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி, 2 விமானிகள் உட்பட 18 பேர் பலியாகினர். பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந் நிலையில் விபத்து பகுதியை பார்வையிட்டவர்களில் 22 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பினராய் விஜயனும் தம்மை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.
மேலும் தம்மை தனிமையும் படுத்திக் கொண்டார். இந் நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.