நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு எப்போது?

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து, மத்திய அரசும், திகார் சிறை நிர்வாகமும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை, டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

நிர்பயா குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனையை தனித்தனி நாட்களில் நிறைவேற்றக் கோரி திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பிலும், மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்து, குற்றவாளிகள் நேரத்தை வீணடிப்பதாக கூறி மத்திய அரசின் சார்பிலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மேல்முறையீட்டை அவசர வழக்காக கருதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே