புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதம் வந்ததா? என மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பியின் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்து பேசியதாவது, புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழி கொள்கையே இந்தியா முழுவதும் பின்பற்றப்படும். 

மூன்றாவது மொழியை தேர்வு செய்வது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் அதில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

மேலும் மாநில அரசுகளின் விருப்பம் இல்லாமல் எந்த மொழியும் திணிக்க கூடாது என மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே