9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை..!!

தமிழக அரசு 9 பேரூராட்சிகளை ,நகராட்சிகளாக மாற்றியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை ,
  • திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு,
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
  • காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு,
  • விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம்,
  • இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே