மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019-ஆம் ஆண்டு முதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிகாரிகள் இவர் எந்த விதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே