ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #whatsappdown ஹேஸ்டேக்

உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலி என்றால் அது வாட்ஸ் அப் தான்.

தொலைவில் இருக்கும் ஒருவரிடம்  தகவலை எளிதில் பகிர்வதற்கு வாட்ஸ்அப் உதவுகிறது.

இந்நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் வாட்ஸ் அப்பில் புகைப்படம் பகிர்வதிலும், வீடியோ அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலையும் வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து டிவிட்டர் ட்ரெண்டிங்கில் #whatsappdown என்ற ஹேஸ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் விரைவில் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே