ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை

ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என்று திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

நிலத்தடியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்படும். இந்த கிணறுகளை அமைக்க ஏற்கனவே உள்ள விதிகளின்படி சுற்றுச் சூழல் துறையின் அனுமதி கண்டிப்பாக தேவை.

மேலும், கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், பழைய விதிமுறைகளை திருத்தி மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறுகளை அமைக்க சுற்றுச் சூழல் துறையின் அனுமதி தேவையில்லை.

அதேபோல, பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை.

இந்த புதிய விதிமுறையால் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு எடுக்க பல நிறுவனங்கள் அனுமதி கோரி சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பங்கள் அளித்தது செல்லாது.

இதனால், அவர்கள் நேரடியாக ஆய்வுக் கிணறுகளை அமைக்க முடியும்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே, இத்தகைய ஆய்வுக்கிணறுகளுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், தற்போது நேரடியாக நிறுவனங்கள் கிணறுகளை அமைக்க விதித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே