மக்கள் எந்த உணவுகளை விரும்புகிறார்களோ, அதை தாராளமாக சாப்பிடலாம் – உச்ச நீதிமன்றம்

மக்களின் உணவு பழக்க வழங்கங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஹலால் முறைக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என நீதிமன்றம் தலையிட முடியாது.

அசைவம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்கள் என பிரித்து பார்க்க முடியாது.

மக்கள் எந்த உணவுகளை விரும்புகிறார்களோ அதை தாராளமாக சாப்பிடலாம் எனக்கூறிய நீதிமன்றம், இந்த மனு தேவையற்றது எனக்கூறி தள்ளுபடி செய்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே