தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோலி விளக்கம்!

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தீவிரம் காட்ட முயற்சித்து அதில் தோற்றோம் என விராட்கோலி கூறினார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் இந்தத் தொடரில் 2 – 1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தீவிரம் காட்ட முயற்சித்து அதில் தோற்றதே தோல்விக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

“இரண்டாவது பாதியில் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்தோம். அதன்படி பீல்டிங்கில் தீவிரம் காட்ட முயற்சித்தோம். இருந்தாலும் அதில் தோற்றோம். எங்களது பாடி லாங்குவெஜ் சரியில்லை என நான் கருதுகிறேன். டாஸ் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இருந்தாலும் டாஸை இழந்த பிறகு அதற்கேற்றபடி நாம் ஆட வேண்டியுள்ளது. நியூ பாலில் விளையாடுவது சற்று சவாலான காரியம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறி விட்டோம். ஒரே ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் தான் அமைக்க முடிந்தது” என கோலி ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் டாஸை இழந்த இந்தியா முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் 156 ரன்களை குவித்தது. இந்தியாவுக்காக கோலி சிறப்பாக விளையாடி இருந்தார். இங்கிலாந்து 10 பந்துகள் எஞ்சிய நிலையில் 158 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே