இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!!

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை அடித்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யயூ வேட் 80 ரன்கள் அடித்தார்.

187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிரங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் போட்டியின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஷிகர் தவான் 28 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க கேப்டன் விராட் கோலி மட்டுமே நிதானமாக விளையாடி சர்வதேச டி 20 போட்டியில் தன்னுடைய 25 ஆவது அரை சதத்தை அடித்தார்.

இதையடுத்து கடைசி 5 ஓவரில் 76 ரன்கள் தேவை என்ற போது ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

16 ஆவது ஓவரில் 20 ரன்களும், 17 ஆவது ஓவரில் 13 ரன்களும் அடிக்கப்பட்டது.

18 ஆவது ஓவரில் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டானார். 13 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார்.

இறுதியில் இந்திய அணியால் 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே