64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..!!

இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 77 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு டேவிட் வார்னர், ஆரான் பின்ச் ஜோடி 142 ரன்கள் அடித்தது. ஆரான் பின்ச் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசாங்னே ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 

இதையடுத்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 3 போட்டிகளில் சதமடித்துள்ளார்.

1) 69 ரன்கள்
2) 98 ரன்கள்
3) 131 ரன்கள்
4) 105 ரன்கள் (நவம்பர் 27, 2020)
5) 104 ரன்கள் (நவம்பர் 29, 2020)

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே