நாடு முழுவதும் தினமும் உருவாகும் 146 டன் கரோனா மருத்துவக் கழிவுகள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் தினமும் 146 டன்கரோனா மருத்துவக் கழிவுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது/

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் பரிசோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மூலம் தினமும் 146 டன் மருத்துவ கழிவுகள் உருவாவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தினமும் சுமார் 616 டன் கழிவுகள் உருவானதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

அதேநேரம், இந்தக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்வதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. மருத்துவக் கழிவு நிர்வாகவிதிகள் 2016-ன்படி, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகள், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாகஅகற்றுவது மற்றும் சுத்திகரிப் பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். இதன்படி, மாநில மாசு கட்டுப்பாட்டுவாரியங்கள் 202 பொது மருத்துவக் கழிவு சுத்திகரித்தல் மற்றும் அகற்றும் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே