பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?… ஐகோர்ட் கிளை

கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு ஏழு நாட்கள் காலதாமதம் ஆவது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கொரோனா மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் இருக்கும் போது, பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர். ந

ீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அரசு எதிர்ப்பார்க்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே