சூரியகுமார் யாதவ் ஆடி என்ன பார்த்திருக்கிறார் இவர், ஏன் டீமை விட்டு தூக்க வேண்டும்?- கோலியை விளாசிய கவுதம் கம்பீர்

உலகக்கோப்பை டி20 தொடர் அணியில் சூரியகுமார் யாதவ் இருப்பார் என்றால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்க வேண்டும், இல்லையேல் அவரை வேறு வேலை பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் அணியில் வைத்திருப்பது, ஆனால் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது கொடுமை என்று கம்பீர் விளாசியுள்ளார்.

சூரியகுமார் யாதவ்வை முதல் டி20-க்கு அணியில் எடுக்கவில்லை. 124 ரன்களுக்கு மடிந்து பல்பு வாங்கியது இந்திய அணி. 2வது போட்டியில் சூரியகுமார் யாதவ் இருந்தார், ஆனால் பேட்டிங்கில் இறக்கப்படவில்லை.

இந்நிலையில் 3வது போட்டிக்கான அணியிலேயே சூரியகுமார் யாதவ் இல்லை. இது என்ன தான்தோன்றித்தனமான ஒரு அணித்தேர்வு என்று பலரும் கேள்வி எழுப்ப விராட் கோலி இதற்கெல்லாம் பதில் கூறுவாரா என்ன? கோலி வந்தாலே இதான், யாரையும் செட்டில் ஆக விடமாட்டார். தனக்கு நெருக்கமான வீரர்களைத் தாண்டி அவரால் யோசிக்க முடியாது.

இஷான் கிஷனை எடுத்தார் 2வது போட்டியில் 3வது நிலைக்கு இறக்கினார். வாஷிங்டன் சுந்தர் அணிக்காக ஆடுகிறார் என்கிறார், ஆனால் சாஹலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆர்சிபி அணிக்கு ஆடும்போது சுந்தர் பவர் ப்ளே பவுலர், இந்தியாவுக்கு ஆடும்போது அவரை வீணடிப்பது. ஒரு வீரரை எப்படி வீணடிப்பது என்பதை கோலியிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்!!

இந்நிலையில் எத்தனையோ கனவுகளுடன் பாவம் போராடி அணிக்குள் நுழைந்த சூரிய குமார் யாதவ் வாய்ப்பு கொடுக்கப்படாமலே நீக்கப்பட்டுள்ளார். முச்சதம் அடித்த கருண் நாயரின் கிரிக்கெட் கரியரைப் பாழாக்கியவர் விராட் கோலி, அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் கரியரை காலி செய்தவர் விராட் கோலி. இதையெல்லாம் எந்த பத்திரிகை நிருபரும் எந்த ஊடகமும் அவரிடம் கேட்பதில்லை. மாறாக அவரை புகழ்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கவுதம் கம்பீர்தான் உண்மையை போட்டு உடைக்கிறார், கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது உலகக்கோப்பை டி20 தொடர் அணியில் சூரியகுமார் யாதவ் இருப்பார் என்றால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்க வேண்டும், இல்லையேல் அவரை வேறு வேலை பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் அணியில் வைத்திருப்பது, ஆனால் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது கொடுமை என்று கம்பீர் விளாசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உலகக்கோப்பைக்கு 7 மாதங்களுகு முன்பாக அதற்காக தயார் செய்வாராம். உலகக்கோப்பை முடிந்து அடுத்த உலகக்கோப்பைக்கு தயாரிப்பில் ஈடுபடுவார் போல. இது விஷயமல்ல, என்ன மாதிரியான பார்மில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அணியில் யாருக்காவது காயம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது சூரியகுமார் யாதவை அணியில் தேர்வு செய்ய வேண்டுமெனில் அவரது ஆட்டத்தை பார்க்க வேண்டாமா, அதற்கு வாய்ப்பளிக்க வேண்டாமா?

சூரியகுமார் ஆட்டத்தை நீங்கள் என்ன பார்த்து விட்டீர்கள் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை என்ன பார்த்து விட்டீர்கள்? யாரோ ஒரு வீரருக்கு காயம் ஏற்படுகிறது. காயம் ஏற்பட்டால் 4 அல்லது 5ம் இடத்தில் யாராவது இறங்கியாக வேண்டும். ஷ்ரேயஸ் அய்யருக்கு மாற்று வேண்டுமெனில் யாரைத் தேர்வு செய்வீர்கள்?

எனவே அணிக்குள் யாரையாவது கொண்டு வர முயலுங்கள். சூரிய குமார் யாதவுக்கு 3-4 ஆட்டங்கள் வாய்ப்பு கொடுத்து அவர் எப்படி ஆடுகிறார் என்று அறுதியிடுங்கள். நாம் தொடர்ந்து சதா தயாரிப்பு தயாரிப்பு என்று பேசுகிறோம், ஆனால் இது ஒன்றும் உலகக்கோப்பை தயாரிப்பு போல தெரியவில்லை. இத்தனையாண்டுகளாக ஆடும் வீரர்களை பாதுகாப்பது போல்தான் தெரிகிறது. ” என்று கோலியை விளாசினார் கம்பீர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே