புவனேஸ்வர், பூரி, விசாகப்பட்டினம்- சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் புவனேஸ்வர், பூரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் – சென்னைசென்ட்ரல் இடையே வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் பண்டிகைக்கால அதிவிரைவு சிறப்பு ரயில் (02839)ஏப்.1-ம் தேதி முதல் ஜுன் 24-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில் (02840) ஏப்.2-ம் தேதி முதல் ஜுன் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் – புதுச்சேரி வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால ரயில் (02898) ஏப்.6-ம் தேதி முதல் ஜுன் 29-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி -புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (02897) ஏப்.7-ம்தேதி முதல் ஜுன் 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் – ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால சிறப்பு ரயில் (08496) ஏப்.2-ம் தேதி முதல் ஜுன் 25-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (08495) ஏப்.4 முதல் ஜுன் 27-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பூரி – சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால சிறப்பு ரயில் (02859) ஏப்.4-ம் தேதி முதல் ஜுன் 27-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் – பூரி வாராந்திர சிறப்பு ரயில் (02860) ஏப்.5 முதல் ஜுன் 28-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவுபண்டிகைக்கால சிறப்பு ரயில்(02869) ஏப்.5 முதல் ஜுன் 28-ம்தேதி வரையும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயில் (02870) ஏப்.6 முதல் ஜுன் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே