தமிழகத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன..??

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான இன்று 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், ஸ்பெஷலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதுகுறித்த விவரம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 119 கி.மீ தொலைவுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும். 277 கிமீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கும்.

தமிழ்நாடு-கேராளவை ஒன்றிணைக்க நவீன வசதிகளுடன் கூடிய மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். 1.03 லட்சம் கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே