தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும் 5 அற்புத உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க…

தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. ஏனெனில் குழந்தைக்கு ஆரோக்கியமான போஷாக்கு நிறைந்த தாய்ப்பாலை கொடுப்பது அவசியம். ஏனெனில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குழந்தைகளையும் பாதிக்கும். எனவே பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான திரவங்களைக் கொண்ட உணவுகள் அவசியம். புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள், புரத உணவுகள் மற்றும் சிறிய அளவிலான கொழுப்புகளை உள்ளடக்கிய ஒரு சீரான உணவை பெண்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவரின் கூற்றுப்படி வெந்தயம், பச்சை காய்கறிகள் போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இந்த வெந்தய இலைகளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துக்கள், இரும்பு போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் விதைகளில் போலிக் அமிலம், நியாசின் போன்ற உணவுகளும் உள்ளன.
​பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரக விதைகள் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜெனிக் போன்ற பண்புகள் காணப்படுகிறது. இந்த பண்புகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உங்க மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

​கீரைகள்
கீரைகள் இரும்புச் சத்து நிறைந்த மிகச்சிறந்த மூலமாகும். இது அனிமியா போன்ற இரத்த சோகை நோயை குணப்படுத்த பயன்படுகிறது. நீரினால் ஏற்படும் தொற்றுநோய்களை தவிர்க்க நன்கு வேகவைத்து கீரைகளை சாப்பிடுங்கள்.

​நட்ஸ் வகைகள்
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இது செரோடோனின் சக்திவாய்ந்த மூலமாக உள்ளது. நட்ஸ்களில் இயற்கையாகவே அதிக அளவிலான புரதம், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம், நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், அது கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் சமயத்திலும் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

​பூசணி விதைகள்
பூசணி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இவை உங்க குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. ஒமேகா 3 அமிலத்தை கொண்டு உள்ளது. இது டிஹெச்ஏ மற்றும் ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் இயற்கையான மூலமாகும். இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவுகிறது.

​பழுப்பு நிற அரிசி
பாலூட்டும் தாய்மார்கள் பழுப்பு நிற அரிசியை தேர்ந்தெடுப்பது நல்லது. இது நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது உங்க பாலூட்டும் ஹார்மோனை தூண்டி பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் வெள்ளை அரிசிக்குப் பதிலாக பழுப்பு அரிசியையோ அல்லது சிகப்பரிசியையோ சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் சுரத்தலைத் தூண்ட உதவியாக இருக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே