என்றும் 16 போல் இளமையாக வைத்திருக்கும் கோதுமை புல்! ஹெல்தியான சூப்பர் ஃபுட் இதுதானாமே!

கோதுமை தெரியும் அது என்ன கோதுமையிலிருந்து வளரும் புல் என்கிறீர்களா, படித்து தெரிந்துகொள்ளுங்கள்!
வீட்கிராஸ் என்று அழைக்கப்படும் கோதுமைச் செடியின் தண்டிலிருந்து எடுக்கப்படுவது தான் கோதுமை புல் தூள் எனப்படும். கோதுமைக்கு இணையாக என்று சொல்வதை விட கோதுமையை காட்டிலும் பல மடங்கு சத்து தருகிறது கோதுமை புல் பொடி.
கோதுமை பொடி என்பது கோதுமை புல்லின் சாறை பிரித்தெடுப்பதன் மூகம் கிடைக்கிறது. அதே போன்று கோதுமை புல்லிலிருந்து சாறு தயாரித்து குடித்து வருவதும் கூட அதிகரித்துவருகிறது. அப்படி என்ன இருக்கிறது கோதுமை புல்லில், இதை வீட்டில் வளர்க்க முடியுமா? இவை தரும் நன்மைகள் என்ன என்று அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
​கோதுமை புல்
கோதுமைப் புல்லின் அடிப்படையே அதன் இலை, தண்டுகளில் இருக்கும் குளோரோபில்கள் தான். மனித ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹெமின் என்னும் பொருளும், கோதுமைப்புல்லில் இருக்கும் குளோரோபினும் ஒன்றாகவே இருக்கின்றன என்கிறது ஆராய்ச்சிகள்.
குளோரோஃபில் என்பது தாவரங்களின் ரத்தம் என்று சொல்கிறார்கள். இது நம் உடலுக்கு செல்லும் போது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடல் வயதான தோற்றத்தை தடுத்து நிறுத்துகிறது. புற்றுநோயை தடுக்கும் பொறுப்பை ஏற்கிறது.

சமீப காலமாகவே இது சூப்பர் ஃபுட்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவை தரும் நன்மைகளின் பட்டியல் மிக நீளமானது என்றாலும் சுருக்கமாக பார்க்கலாம்.

உடலில் அமிலத்தன்மை சீராக்கும்
கோதுமை புல் செரிமான செயல்முறையை சிறப்பாக்குகிறது என்கிறது அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி இதில் இருக்கும் தாதுக்கள் வயிற்றில் இருக்கும் புண்களை குணப்படுத்தும். இதில் மெக்னீஷியம் சத்தும் இருப்பதால் இவை மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

பெருங்குடலை சுத்தம் செய்து உடலின் அமிலத்தன்மை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்களை சமன்படுத்துகிறது. உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது.

​ரத்த சர்க்கரை அளவு
உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் என்னும் மாவுச்சத்து குளுக்கோஸாக மாற்றப்பட்டு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் வேகமாக அதிகரிக்கிறது.

கோதுமை புல் உடல் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை தாமதப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. வளரும் பருவத்தில் அவ்வபோது கோதுமை புல் எடுத்து வந்தால் நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தலாம். அப்படியே வந்தாலும் அதைக் கட்டுக்குள் வைக்கவும் அவை உதவுகிறது.

​கொழுப்பு மற்றும் உடல் எடை குறைய
கோதுமை புல் உடல் எடையை குறைக்கவும் பயனளிக்கிறது. இவை தைராய்டு சுரப்பியின் அளவு அதிகமாக இருந்தால் அதை கட்டுப்படுத்தியும் குறைவாக இருந்தால் அதை அதிகரித்தும் சீராக வைப்பதால் தைராய்டு பிரச்சனையால் உடல் எடை அதிகரித்தவர்கள் கட்டுக்குள் வேகமாக உடல் எடையை கொண்டுவரமுடியும். கோதுமைப்புல்லில் தைராய்சு சுரப்பி செயல்பாட்டுக்கு தேவையான செலினியம் சத்தை கொண்டிருக்கிறது.
உடல் எடை குறைப்பின் போது உடல் ஆற்றலை இழக்காமல் வலுவாக வைத்திருப்பதால் உடல் எடை குறைப்பும் ஆரோக்கியமாக உண்டாகிறது.

​வாதம் முடக்குவாதம்
உடல் உறுப்புகளை செயல்படவிடாமல் அடக்கி விடுவதால் இதை முடக்குவாதம் என்று அழைக்கிறார்கள். உடலில் எதிர்ப்புசக்தியானது உடலில் இருக்கும் திசுவை எதிர்க்கும் நிலை தான் முடக்கு வாதம். பொதுவாக கை, கால் மூட்டுகளில் அழற்சி உண்டாக்கும். விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவற்றிலும் பாதிப்பை உண்டாக்கும். இது எந்த வயதிலும் வரலாம்.

வாத நோய் உபாதைகளால் ஆய்வு ஒன்றில் அவதிக்குள்ளானவர்கள் கோதுமை புல் பானங்களை குடித்துவந்தால் முடக்குவாதத்தால் உண்டாகும் அறிகுறிகள் குறைவதாக தெரிவித்துள்ளார்கள். கோதுமை புல் பானத்துக்கு மாற்றாக கோதுமை புல் பொடியும் பயன்படுத்தலாம்.

​வெரிகோஸ் பிரச்சனை
உடலில் அசுத்த ரத்தமானது நரம்புகளில் வீங்கி பருத்த நிலையில் இருக்கும். இந்த நரம்புகள் நீண்டு பெரிதாகி ரத்தம் அதில் தேங்கியிருக்கும். இவை அதிக வலியை கொண்டிருக்கும். சமயங்களில் நடக்க் முடியாத படி உபாதையை உண்டாக்கும். இவை பச்சை நரம்புகளை வெளிப்புறமாக தெரியும்படி கொண்டிருக்கும், சில நேரங்களில் நீல, இளஞ்சிவப்பு நிறத்திலும் வெளியில் தெரியும். கோதுமை புல் எடுத்துகொள்ளும் போது நரம்புகளில் வீக்கம் படிப்படியாக குறையும். வலி உபாதையும் குறையும்.

​உடலுக்கு எதிர்ப்பு சக்தி
கோதுமைபுல் இரட்தத்தில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வலு கொடுக்கவும் பெரிதும் துணைபுரிகிறது. வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

​ஆரோக்கியமான அழகு
கோதுமை புல்லில் ஆரோக்கியமான வைட்டமின்கள் முதுமையை தள்ளிப்போட உதவுகிறது. இதனால் வயதான தோற்றம் இளவயதில் உருவாது தடுக்கப்படுகிறது. சருமத்தில் வறட்சியில்லாமல் வைத்திருக்கவும், சுருக்கங்களை தடுக்கவும் இதில் இருக்கும் குளோரோபில்கள் உதவுகிறது. முடியின் நிறம் கருமையாக இருக்கவும் இளநரை உண்டாகாமல் இருக்கவும் கூட கோதுமை புல் பயன்படுகிறது. ஆரம்ப கால இளநரையை விரட்டி அடிக்கவும் இது பயன்படுகிறது.
கோதுமை புல்லை சாறாக்கி குடிக்கலாம். அல்லது இதன் பொடியை உணவில் கலந்தும் எடுத்துகொள்ளலாம். சாறுகளுடன் கலந்தும் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் அளவு மட்டுமே கலந்து குடிக்க வேண்டும். அளவுக்கதிகமாக குடிக்க வேண்டாம். கோதுமைபுல்லை வீட்டிலும் வளர்க்கலாம். எப்படி என்பதை தனியாக பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே