#BLACKLIVESMATTER வாசக சீருடையுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்!

கொரோனா பாதிப்புக்கு இடையே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவில் கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்டு போலீசார் கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அமெரிக்காவில் இன்னும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் விளையாட்டிலும் இனவெறி உள்ளது என்று வீரர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் தொடங்கிய இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில், பங்கேற்ற கால்பந்து வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டி-சர்ட்டில் ‘Black Lives Matter’ என்ற லோகாவை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ”ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்வது ஆகியவை எங்களது கடமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே