சக்கர நாற்காலியில் அமர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேரணி..!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பேரணியில் பங்கேற்றார்.

மார்ச் பத்தாம் நாள் நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி காரில் சென்றபோது ஓரிடத்தில் நெரிசலில் சிக்கிக் காயமடைந்தார்.

இதன்பின்னணியில் சதி உள்ளதாகத் திரிணாமூல் காங்கிரசும், இது நாடகம் என பாஜகவும் மாறி மாறித் தெரிவித்துள்ளன.

இது திடீரென நேர்ந்த விபத்து என்றும், திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்றும் தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பின் வீடு திரும்பிய அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கொல்கத்தாவில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பங்கேற்றார்.

அவருக்குப் பின்னால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே