தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு

அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

இதனையடுத்து வருகிற தேர்தலில் தேமுதிக தனித்து களம் காணுமா? அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில், அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

தேமுதிக தரப்பில் யாரும் இதனை வெளிப்படையாக சொல்லத நிலையில், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மைதான், விரைவில் முடிவு தெரியவரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திவிட்டதாகவும், சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் போதிய இடங்கள் கிடைக்காததால் இந்த முடிவினை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே