தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் மார்ச் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில், 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,
ஆயிரம் விளக்கு- குஷ்பு
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
தாராபுரம்- எல்.முருகன்
அரவக்குறிச்சி- அண்ணாமலை
காரைக்குடி – எச்.ராஜா

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே