சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருத்துறைபூண்டி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். 

அதன்படி,

1. திருத்துறைபூண்டி – மாரிமுத்து

2. தளி – ராமச்சந்திரன்

3. திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன்

4. பவானிசாகர் – சுந்தரம்

5. வால்பாறை – ஆறுமுகம்

6. சிவகங்கை – குணசேகரன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே