திமுகவுடன் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம் – கே.எஸ்.அழகிரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடர்ந்து துணை நிற்கும் என அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடம் ஒதுக்கவில்லை என்று திமுக மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி புகார் தெரிவித்ததால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. 

இரு கட்சியினருக்கு இடையிலான மனக்கசப்பை போக்கும் வகையில், கே.எஸ். அழகிரி  வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் எதிர்த்து திமுக மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிகள் தொடர்ந்திட, ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம் என அழகிரி தெரிவித்துள்ளார். 

ஜனநாயகத்தை வீழ்த்தி சதி செயலில் ஈடுபட்டு வரும் கட்சிகளை அம்பலப்படுத்தி, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே