நடிகர் ரஜினிகாந்த்துடன் வி.கே.சசிகலா சந்திப்பு..!!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சசிகலா, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்த சசிகலா, உடல் நலம் குறித்து கேட்டறிந்ததோடு, தாதா சாகேப் விருது பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே