இந்திய மக்களுக்கு துணை நிற்கிறோம் – அமெரிக்கா

கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மருத்­து­வ­ம­னை­கள் திண­றி­ய­வாறு ஆக்­ஸி­ஜன் விநி­யோ­கம் தேவை என்று கோரி வரும் நிலை­யில், மூன்­றா­வது நாளாக இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், உயி­ரி­ழந்­த­வர்­கள் எண்­ணிக்கை மீண்­டும் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

மேலும், கொரோனா தொற்­று பாதிப்புகள் உச்­சத்தை எட்­டக் குறைந்­தது 3 வாரங்­க­ளா­வது ஆகும் என்று கணித்த நிபு­ணர்­கள், நாட்­டில் உண்­மை­யான உயி­ரி­ழப்பு மற்­றும் தொற்று எண்­ணிக்கை அறி­விக்­கப்­ப­டு­வ­தை­விட அதிகமாக இருக்­கும் என்று கூறு­கின்­ற­னர்.

இந்த நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நாங்கள் இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

மேலும் இந்திய மக்களுக்கும் இந்தியாவின் சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் உதவிகளை விரைவாக வழங்குவோம்.

இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடுவதால், இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவைப் பயன்படுத்த நாங்கள் கடிகாரத்தை போன்று சுற்றி வருகிறோம்.

இந்தியாவின் நிலைமையை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே