இனிதான் மோசமான விளைவுகளை சந்திக்கப் போகிறோம்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான நேரம் இனி தான் வரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உலக நாடுகள் தளர்த்துவதால், கொரோனா புதிய எச்சரிக்கை மணி ஓசையை எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

வைரஸ் தீவிரம் பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும், இந்த பேரழிவை நாம் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வைரஸை தடுப்பது குறித்து நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வைரஸின் மறு தொற்று குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் டெட்ரோஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

கொரோனா வைரஸ் குறித்த எந்தவொரு தகவலையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மறைக்கவில்லை என்று டெட்ரோஸ் விளக்கம் அளித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே