நாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள் – சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர்.

அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டரில், ” மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே