ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவரான ஹவ்லா அல் ரோமைதி 87 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்குப் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹவ்லா அல் ரோமைதி. இவர் மிகக்குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர் எனும் புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் 3 நாள்கள் 14 மணி நேரம் 46 நிமிடம் 48 விநாடிகளில் மொத்தம் 7 கண்டங்களைக் கடந்து பயணம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தனது பயணத்தை முடித்ததன் மூலம் புதிய சாதனையைப் படைத்தார்.

ரோமைதி தனது பயணத்தில் மொத்தம் 208 நாடுகளைக் கடந்துள்ளார். மிகவும் சவாலான இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது குறித்து ரோமைதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே