ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பு இந்தியா’ என்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பெருமளவில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாகவே இந்தியா பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா பல ஆண்டுகளாக உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.