வைரல் புகைப்படம் : நடிகர் விஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு..!!

கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல்!

நடிகர் விஜய்யை கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

நடப்பு ஆண்டின் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தொடரில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தியும் ஒருவர்.

அவரின் ஒவ்வொரு செயல்பாடுகள் அதிக அளவில் வைரல் வீரர்களின் வருகின்றன. சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஆவார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, விளையாட வரும் முன்னரே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா என்ற கிரிக்கெட் சம்மந்தபட்ட படத்தில் நடித்துள்ளார். 

கிரிக்கெட் மீதான காதலை தாண்டி அவருக்கு நடிகர் விஜய் என்றால் அலாதி பிரியம். விஜயின் தீவிர ரசிகர் என்றே சொல்லலாம்.

அதன் அடையாளமாய் வருண் சக்ரவர்த்தி மேலும் இடது கையின் தோள்பட்டையில் தலைவா படத்தில் விஜய் கை தூக்கி திரும்பி நிற்கும் படி இருக்கும் டிரேட்மார்க் போஸை டேட்டூவாக குத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே