இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு…!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. இலங்கை முழுவதும் மொத்தம் 60% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 3,682 பேரும் சுயேட்சைகளாக 3,800 பேரும் போட்டியிட்டனர். இலங்கையில் கடந்த, 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதிபர் கோட்டபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 1ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.

தேர்தலை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு மாலை 5 மணியோடு நிறைவுபெற்றதாக கூறப்படுகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே