2ம் நாளாக 6 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை… குணமடைந்தோர் விகிதம் 67.19%.. மத்திய அரசு!!

நாடு முழுவதும் தொடர்ந்து 2ம் நாளாக 6 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,19,652 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 2.14 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,08,254 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,509 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,795 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 12,82,215 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 67.19 % ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே