தமிழகத்தில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கடந்த 27-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 91, 975 பதவிகளில் 45, 336 பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 மணி வரை நடைபெற உள்ளது.
158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் இத்தேர்தலையொட்டி 61,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1,551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.