5 மொழிகளில்,150 நாடுகளில்; OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..!

ஓடிடி தளமான zeeplex-ல் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் வெளியாகிறது.

நடிகர் விஜய் சேதுபதி – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இதில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

zeeplex தளத்தில் தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் சுமார் 150 நாடுகளில் படம் க/பெ. ரணசிங்கம் ரிலீஸாக உள்ளது.

வீட்டிலேயே மக்கள் இருந்து , பாதுகாப்பாக திரைப்படம் பார்க்க ஓடிடியில் படத்தை வெளியிடுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஓடிடி படம் வெளியாவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறியுள்ள நிலையில் ஓடிடி பிளாட்ஃபார்ம் என்பதை தாண்டி இத்தனை மொழிகளில் வெளியாகும் முதல் படம் க/பெ. ரணசிங்கம் என்ற பெருமையை இப்படம் தட்டி சென்றுள்ளது.

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே