800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரன் அறிக்கை விட்டதும், ‘நன்றி! வணக்கம்’ என்று டுவிட் செய்திருந்தார் விஜய்சேதுபதி.

இதனால் 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக பேசப்பட்டது.

ஆனாலும் விஜய்சேதுபதி நேரடியாக, விலகுவதாக கூறவில்லை என்பதால் அதில் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்சேதுபதியை செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது, ”நன்றி! வணக்கம் என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்களே. உறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்.

இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறதே. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்” என்று செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டகவும்,

”நன்றி! வணக்கம்னா முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அதுல இருக்குறதே அவ்வளவுதான்.

முடிஞ்சு போச்சு. அதுல பேசுறதுக்கு இனி ஒண்ணும் இல்லன்னு அர்த்தம்”என்று ஆத்திரத்துடன் சொன்னார் விஜய்சேதுபதி.

நேரடியாக சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கவும், ”முடிஞ்சு போச்சு.முடிஞ்சு போச்சு ..”என்று ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.

விஜய்சேதுபதியின் பேச்சில் விரக்தியும், ஆத்திரமும் இருந்ததை உணரமுடிந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே